காதலிக்கு ஐ லவ் யூ சொன்ன இளைஞர், அவர் ஓட்டுப் போடாத காரணத்தால், தனது காதலை வாபஸ் பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
நடுரோட்டில் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய இளைஞன்! பிறகு இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், 5 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் 2 கட்டங்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு தரப்பினரும் மக்களிடையே ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி, டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், வாக்குப் பதிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சுவாரசியமான காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தும் இளைஞர், அவரது கையில் மோதிரம் அணியப் போகிறார்.
அப்போது, காதலியின் கையில் ஓட்டுப் போட்டதற்கான மை அடையாளம் இல்லை என்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர், தனது காதலை வாபஸ் பெறுவதாகக் கூறுகிறார். தனது தாய்நாட்டை நேசிக்காத ஒருவள், எப்படி என்னை நேசிப்பாள் என, அந்த இளைஞர் வருத்தம் தெரிவிக்கிறார்.
இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள டெல்லி இளைஞர்கள், காதல் உள்பட எந்த ஒரு புரட்சியும் செய்வதற்கு முன், முதலில் ஜனநாயகக் கடமையாற்றுவது அவசியமாகும், அதில் தவறுவோருக்கு, காதல் உள்பட எதுவும் கிடைக்காது என்று, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாக்குரிமையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ள இந்த வீடியோ, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.