முதல்வருக்கான போட்டியில் விவசாயி எடப்பாடிக்கு எதிராக வாரிசு அரசியலின் அடையாளமான ஸ்டாலினா…? வைரலாகும் பதிவு.

வரும் 2021 தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருவர் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கும் விவசாயியான எடப்பாடி பழனிசாமி. அடுத்தவரோ, வாரிசு என்ற பெயரில் தி.முக. கட்சியை தன் குடும்பத்துக்கு அடகு வைத்திருக்கும் ஸ்டாலின்.


இருவருக்குமான ஒப்பீடுதான் இப்போது வைரலான பதிவாக இருக்கிறது. தமிழகத்தின் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஸ்டாலினுக்கு, தந்தை முதல்வராக இருந்த காரணத்தினால் அரசியல் நுழைவு மிக எளிதாக இருந்தது. தொண்டர்கள், பொதுமக்களின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளாமலேயே அரசியலில் அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 1974ல் ஒரு கடைநிலைத் தொண்டனாக அரசியலில் அடியெடுத்துவைத்த எடப்பாடி எளிய மக்களோடு இரண்டறக் கலந்து அரசியலில் பயணித்தார்.

5 முறை சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், துணை முதல்வர் என ஸ்டாலினுக்கு திகட்டும் மட்டும் பதவிகள் தரப்பட்டன. ஆனால் எடப்பாடியின் உழைப்பையும், தலைமை மீது கொண்ட விசுவாசத்தையும் பார்த்து பதவிகள் அவரை தேடி வந்தன. 1989ல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதிலிருந்து 4 முறை அந்த பொறுப்பை வகித்து வருகிறார். இடையில் 1998 முதல் 99 வரை எம்.பி பதவியும் கிடைத்தது.

திமுகவில் சீனியர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டு ஸ்டாலினுக்கு கட்சி பதவிகள் அடுத்தடுத்து தரப்பட்டன. கருணாநிதி இருந்தபோதே செயல் தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர் இப்போது தலைவர் பதவியை பிடித்துக்கொண்டார். ஆனால் கிளைச் செயலாளர் பதவியிலிருந்து தனது கடினமான உழைப்பால் மாவட்டச் செயலாளர் வரை உயர்ந்து தற்போது இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கிறார். எம்ஜிஆர் தனக்கு வழங்கிய கொள்கை பரப்பு செயலாளர் பதவியை, ஜெயலலிதா, எடப்பாடிக்கு வழங்கி அழகு பார்த்தார். அதுபோலவே 2011ல் இவருக்கு அமைச்சரவையிலும் இடமளித்தார் ஜெயலலிதா. அங்கு தனது அயராத பணிகளின் மூலம் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார்.

வாரிசு அரசியல் மூலம் உயர்ந்த இடங்களைப் பிடித்த ஸ்டாலின் தொண்டர்களை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளே அவரிடம் தயங்கித் தயங்கித்தான் பேசும் நிலை உள்ளது. ஆனால் இபிஎஸ்-சின் அணுகுமுறை இதற்கு நேரெதிரானது. சாதாரண தொண்டனையும் கூட அரவணைத்துச் செல்வார். இந்த நல்லியல்பு காரணமாகவே 2016 தேர்தலில் சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் 10ல் அதிமுக வென்றது. இதுவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைய முக்கியக் காரணமாக அமைந்தது.

திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றது முதலே அந்தக் கட்சிக்குள்ளும், அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஸ்டாலினின் சர்வாதிகார போக்கு பிடிக்காமல் வி.பி துரைசாமி, கு.க செல்வம் எம்.எல்.ஏ என பலரும் விலகி வருகின்றனர். ஸ்டாலினின் பெரியண்ணன் நடவடிக்கையால் கூட்டணி கட்சிகள் மாற்று யோசனையில் இறங்கியிருக்கின்றன. ஆனால் அதிமுக கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தனது எளிமையான அணுகுமுறைகளால், நாகரீகமான நடவடிக்கைகளால் பூரண அமைதியைப் பேணி வருகிறார் எடப்பாடி. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என எழுந்த சர்ச்சைக்கு மிக சாமர்த்தியமாக முற்றுப்புள்ளி வைத்தது, அவரது ராஜதந்திரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இதெல்லாம் அரசியல் தொடர்பான சங்கதிகள். தனிப்பட்ட விஷயங்களுக்கு வருவோம். 80-களில் ‘அந்த’ விஷயங்களில் அத்துமீறி நடந்துகொண்ட ஸ்டாலினுக்கு இன்றுவரை பெண்கள் மத்தியில் ஆதரவு குறைச்சல்தான். இது தவிர நிலமோசடி குற்றச்சாட்டுகளும் அவருக்கெதிராக உண்டு. சிடுசிடு ஸ்டாலின் மிக மோசமான டென்ஷன் பார்ட்டி. தன்னுடன் செல்பி கிளிக் செய்த ஒரு ஆட்டோ டிரைவர் மற்றுமொரு மெட்ரோ ரயில் பயணி ஆகிய இருவருக்கும் அவர் கொடுத்த அறையை தமிழகம் இன்னமும் மறக்கவில்லை. இந்த விஷயங்களில் எடப்பாடியை சொக்கத் தங்கம் என்றே கூற வேண்டும். உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் ஒழுக்கக் கேடான விஷயங்களை அவர் கொஞ்சமும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. அதுபோலவே நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளில் தனது நிழல் கூட படிந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார்.

தந்தையின் அடியொற்றி குடும்ப அரசியலை நடத்திவரும் ஸ்டாலின் வெள்ளக்கோயில் சுவாமிநாதனிடமிருந்த இளைஞரணி செயலாளர் பதவியைப் பிடுங்கி தனது மகன் உதயநிதிக்குக் கொடுத்தார். சீனியர்களின் முணுமுணுப்புகளையும் மீறி உதயநிதிக்கு முக்கியத்துவம் தந்துவரும் அவர் தனது உடன்பிறப்பான அழகிரியை திட்டமிட்டே ஓரங்கட்டினார். அதேபோல தமக்கை உறவுமுறை கொண்ட கனிமொழிக்கும் முக்கியத்துவம் தராமல் புறக்கணித்து வருகிறார்.

அதேநேரம் இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட எடப்பாடி பல மடங்கு மேல் என்றே சொல்ல வேண்டும். முதல்வர் என்கிற அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் தனது குடும்பத்தினர் ஒருவரை கூட இன்றுவரை அவர் பொதுவெளிக்கு கொண்டு வந்ததில்லை. கட்சி நிகழ்ச்சி, அரசு விழா எதிலும் ரத்த சொந்தங்களைக் கூட எடப்பாடி அனுமதித்ததில்லை.

தனக்கென குடும்பம் இருந்தாலும் அதனைத் தாண்டிய மிகப் பெரிய குடும்பமான தமிழ்ச் சமூகத்திற்கு தலைமை தாங்குகிறோம் என்கிற எண்ணம் அவரிடம் எப்போதுமே இருக்கிறது. இந்த எண்ணம்தான் தவறுகளிலிருந்து விலகியிருக்கச் செய்து, மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எடப்பாடியின் புகழை ஸ்டாலின் உள்ளிட்ட வேறு எந்தத் தலைவர்களை விடவும் ஓங்கியிருக்கச் செய்திருக்கிறது.

 ஸ்டாலினின் அரசியலில் சூதையும், சூழ்ச்சியையும் நிறைய காண முடியும். தடைகளைத் தகர்த்தெறிந்து, தனது சாதுர்யமான அணுகுமுறையால் புகழ்க்கொடி பறக்கவிட்டிருக்கும் எடப்பாடியின் வெற்றிப் பயணத்தில் உழைப்பும், விசுவாசமுமே மிகுந்து கிடக்கின்றன.