பேச்சைக் கேட்டாலும் தப்பு, கேட்காவிட்டாலும் தப்பா..? வைரலாகும் நகைச்சுவை

அரசியல்வாதிகள் குறித்து இப்போது வைரலாகிவரும் பதிவு இது. படித்துப்பாருங்கள் சிந்திக்க மட்டுமல்ல, சிரிக்கவும் வைக்கும்.


அம்மா பேச்சை கேட்பவனை ராகுல் என்றும், 

அப்பா பேச்சை கேட்பவனை ஸ்டாலின் என்றும்,

சித்தி பேச்சை கேட்பவனை தினகரன் என்றும்,

எவன் பேச்சையும் கேக்காதவனை மோடி என்றும்,

தான் பேசினதை எவனும் கேக்கலைன்னா எடப்பாடின்னும்,

நான் ஸ்டாப்பிங்கா பேசிக்கிட்டே இருப்பவனை டி.ராஜேந்தர் என்றும்,

பேசவே முடியாதவனை விஜயகாந்துன்னும்,

பேசியே கெட்டவனை நாஞ்சில் சம்பத்துன்னும்,

தான் பேசறது தனக்கே புரியலைன்னா கமல்ன்னும்,

தான் பேசறது அந்த ஆண்டவனுக்கே புரியலைன்னா ரஜினின்னும் சொல்றாங்க ...

இது எப்பிடி இருக்கு?