ஹெச்.ராஜாவுக்கு ஆண்மைன்னா என்னான்னு தெரியுமா? பா.ஜ.க.வை பதறவிட்ட அ.தி.மு.க. ஐ.டி. விங்க்..!

மத்திய அரசின் வழிகாட்டுதல்படியும், மருத்துவர்களின் ஆலோசனை படியும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ரோடுகளில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


இதை எதிர்த்து சசிகலா எம்.பி.யின் கணவர் நீதிமன்றத்துக்குப் போனார். அங்கேயும் அவர்களுக்கு ஆப்புதான் கிடைத்தது. வாபஸ் வாங்கவில்லை என்றால் அபராதம் என்றதும் ஓடியே போனார்கள்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை முன்னிறுத்தி, அதனை ஆண்மையுள்ள அரசு என்று ட்வீட் போட்டிருந்தார் ஹெச்.ராஜா. வழக்கமாக பா.ஜ.க.வின் குரலை கண்டுகொள்ளாத அ.தி.மு.க. இந்த முறை தெறிக்க விட்டுள்ளது.

உடனே கோவை சத்யன், 'ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்வில் வெற்றி பெறுவது. நவீன திருவள்ளுவர்' என்று கிண்டல் செய்து ஒரு ட்வீட் போட்டதும் பற்றிகொண்டது. 

அதற்கு மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யன், 'நீதிமன்றத்தை பழித்துப் பேசி, பின் அது அட்மின் தவறு என பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும். சுயேட்சையாக போட்டியிட்டு 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில் உங்கள் அரசியல் ஆண்மையை நிரூபியுங்கள்' என்று பொங்கி விட்டார். 

இப்படியெல்லாம் அ.தி.மு.க. திருப்பியடிக்கும் என்று தெரியாத பா.ஜ.க. உடனே பம்மிவிட்டது. ராஜா கர்நாடக அரசை சொன்னாரே தவிர, தமிழகத்தை எண்ணி சொல்லவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். அடுத்து என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கலாம்.