வைரலாகும் அசுரன் பட நடிகையின் படு கிளாமர் புகைப்படங்கள்! உண்மை என்ன?

அசுரன் படம் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகை மஞ்சு வாரியரின் படு கிளாமர் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.


மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மஞ்சு வாரியர். இவர் பிரபல நடிகர் திலீப்பை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. 

இந்த நிலையில் திலீப்புக்கு நடிகை காவ்யா மாதவனுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் திலீப்பை விவகாரத்து செய்துவிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரை வெற்றிமாறன் தனது அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக்கினார்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் பேசப்பட்டார். மிகவும் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த மஞ்சுவாரியர் மிகவும் கிளாமராக அதுவும் ஆபாசமான கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆனது.

இது குறித்து விசாரித்த போது பி கிரேடு படம் ஒன்றின் காட்சியில் உள்ள நடிகையின் தலையை வெட்டி அதில் மஞ்சுவாரியை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.