விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வடவானூரின் சாலையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி! ராங் வேயில் சென்றதால் ஏற்பட்ட பயங்கரம்!

வடவானூரில் சாலையில் வேகமாக வந்த கார் எதிரில் வந்த மோட்டார் வாகனத்தின் மீது கட்டுபாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே செஞ்சியை சேர்ந்த குமரேசன் மற்றும் நந்தினி உள்ளிட்ட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் வந்த 4 பேரும் விதிகளை மீறி தவறான பாதையில் வந்துள்ளனர். இதனை கவனிக்காமல் கார் டிரைவர் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒரே பைக்கில் 4 பேர் சென்றால் ஏற்படும் விபரீதமும் இந்த விபத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும் இந்த நிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்