காப்புக் காட்டுக்குள் சிறுவன் சடலம்! அண்ணன், தங்கை, சித்தி என ஒரு குடும்பமே சேர்ந்த செய்த கொடூர கொலை! மிரள வைக்கும் காரணம்!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தி மற்றும் தங்கையுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதை தெரிந்துகொண்ட தம்பியை குடும்பமே சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே அரங்கேறியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி, மூத்தமகன் சரத்குமார், இளையமகன் சிவக்குமார் மற்றும் ஒரு பெண் பிள்ளையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தாய் பராசக்தி முறையற்ற உறவு சிலரிடம் வைத்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. பராசிக்தியுன் நடத்தையை ஒரு கட்டத்தில் நேரில் பார்த்த மூத்தமகன் தனக்கும் அதுபோல் இருக்க ஆசைப்பட்டு தனது இச்சையை தீர்த்துக்கொள்ள அவனது சித்தியுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளான்.

சரத்குமாரும் சித்தியும் உல்லாசமாக இருந்த அசிங்கத்தை தங்கை பார்த்துவிடவே அதிர்ச்சியடைந்த அவன் அவளையும் மிரட்டி “இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன்” என்று பலமுறை பலாத்காரம் செய்து அனுபவித்து வந்துள்ளான். உயிருக்கு பயந்த அந்த பெண் அவன் சொன்னபடியே பலமுறை அவனது இச்சைக்கு இணங்கியுள்ளார்.

இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து முறையற்ற உறவு வைத்திருந்ததை ஒருநாள் இளைய மகன் சிவக்குமார் பார்த்துவிட்டதை கண்டு 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர்.

15 வயது சிறுவன் என்பதால் எப்படியும் தங்களைப் பற்றி வெளியில் சொல்லிவிடுவான் என்று பயந்துபோன 3 பேரும்‘ அவனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர்.பின்னர் அவனிடம் அன்பாக பேசுவது போல் நடித்த மூத்த மகன் காப்புக்காட்டிற்கு சென்று உடும்பு பிடிக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளான். 

ஒரு கட்டத்தில் தான் கொல்லப்படுவோம் என்பதை எப்படியோ உணர்ந்து கொண்ட சிவக்குமார் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளான். ஆனால் சிவக்குமார் சுதாரிப்பதற்குள் இரு பெண்களும் அவனை கெட்டியாக பிடித்துக்கொள்ள மூத்த மகனாக சரத்குமார் இளையவனை கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு அந்தக் காப்புக் காட்டிலேயே சடலத்தை வீசிவிட்டு சென்றுள்ளான். பின்னர் தம்பி காணாமல் போனது போல் நடித்த சரத்குமார் தானே சென்று கண்டுபிடித்ததுபோல் காப்புக்காட்டில் தம்பி இறந்து கிடப்பதாக ஊராரை நம்ப வைத்துள்ளான்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் காப்புக்காட்டில் சென்றுவிட்டு மீண்டும் சிறுவன் வீட்டிற்கே வந்துவிட்டதால் 3 பேர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள்தான் திட்டம் தீட்டி சிறுவனை கொன்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினர்.

இச்சையை தீர்த்துக்கொள்ள அடுத்தவன் மனைவி, அடுத்தவன் தங்கையிடம் தவறான உறவு என்பதெல்லாம் போய், சொந்த தங்கை, சொந்த சித்தியிடமே உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்கிற அளவுக்கு மனிதர்களின் எண்ணம் மாறிவிட்டது என்பது அந்த ஊர் மக்களுக்கான கவலை மட்டுமல்ல. நமக்கும்தான் !