தம்பி பொண்டாட்டியை தான் பொண்டாட்டியாக்கிய அண்ணன்! கர்ப்பம் தரித்ததால் அரங்கேறிய விபரீதம்!

விழுப்புரம் மாவட்டத்தில் தன் மனைவியின் சகோதரியிடம் ஏற்பட்ட தகாத உறவால் அப்பெண்ணின் கணவரை திட்டமிட்டு கொலை செய்து ஆற்றில் புதைத்த நபர்களை விழுப்புரம் மயிலம் போலீசார் கைது செய்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் அவர் அப்பகுதியில் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் முருகன் மாயமானார், இந்நிலையில் முருகனை காணவில்லை என அவரது மனைவி மற்றும் அருகில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் முருகன் பயன்படுத்திய செல்போன் மயிலம் அடுத்த கொடிமாவை சேர்ந்த திருமணத் தரகர் சங்கரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுக்கூர் சங்கராபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் மாயமான அப்பகுதியைச் சேர்ந்த முருகனின் சடலமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். அது முருகனின் உடல்தான் என உறுதி செய்த பின்னரே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது .பின்னர் காவல்துறை முன்னிலையில் உடலை புதைத்தனர்.

 பின்னர் முருகன் மாயமாகி கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பின்னர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார் திருமண தரகர் சங்கரிடம் இருந்து விசாரணையை தொடங்கினர். போலீசார் விசாரணையில் சங்கர் மற்றும் அவரது நண்பரான கலியமூர்த்தியுடன் சேர்ந்து முருகனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது முருகனின் சகலை தான் கலியமூர்த்தி என தெரியவந்தது. முருகன் மனைவியின் சகோதரியை திருமணம் செய்துள்ளார் கலியமூர்த்தி , ஒரு விபத்தில் அவரது மனைவியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் கையை அசைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் முருகனின் மனைவி பாக்கியலட்சுமி தனது சகோதரியை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது கலியமூர்த்திக்கும் பாக்கியலட்சுமி இடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து பாக்கியலட்சுமி கலியமூர்த்தியுடன் கொண்ட உறவால் கர்ப்பமானார்.

இதையடுத்து அதிர்ந்த முருகன் திருமண புரோக்கர் சங்கரிடம் தன் மனைவியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை தேடி கண்டுபிடித்து கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். உடனே சங்கர் கலியமூர்த்தியிடம் இந்த செய்தியை கூறியுள்ளார். அப்போது இருவரும் முருகனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில் முருகன் தனியாக இருந்தபோது அவருக்கு மது வாங்கி கொடுத்து அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து உள்ளனர். அவர் மது குடித்துவிட்டு மயங்கிய நிலையில் அவரை அடித்தும், கழுத்தில் நைலான் கயிரை போட்டு இருக்கியும்  கொலை செய்து இருவரும் சேர்ந்து ஆற்றில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் கொலை குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.