ஜாதி ஆணவக் கொலையில் முடிந்த கொடூரம் ஜவுளிக்கடை பேரம்! விழுப்புரம் பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டம் அருகே அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜாதிப் பிரச்சனையால் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகிறது.


விழுப்புரம், வடகுச்சிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தற்காலிக ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார. தினேஷ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு துணியின் விலையை குறைத்து பேசுவது தொடர்பாக தினேஷிக்கும், துணிக்கடை உரிமையாளர் முருகையன் இருவருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தினேஷ் , முருகையனை கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தந்தை தாக்கப்பட்டதை அறிந்த துணிக்கடை உரிமையாளர்  முருகையனின் மகன் ஆகாஷ் நண்பர்களுடன் சேர்ந்து தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்கு காரணமான ஆகாஷ் உட்பட மேலும் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கொலையான தினேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கொலை செய்த ஆகாஷ் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தினேஷ் கடைக்கும் வந்து வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த முருகையனை அடித்ததே கொலையில் முடிந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஜாதி ஆணவத்தில் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதால் விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.