அந்த அண்ணா என்ன அப்படி செஞ்சாங்க..! வயிறு வலிக்குது! 9 வயது சிறுமிக்கு 17 வயது இளைஞனால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் 9 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி.ஐ மாணவனை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா 17, பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐயில் கல்வி பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் சிவா பல நாட்களாக பேசி வந்துள்ளார்.அந்த மாணவிக்கு வயது 9. சம்பவ தினத்தன்று சிவா மாலையில் ஐ.டி.ஐ முடித்து விட்டு அந்த வழியாக வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் பள்ளியை முடித்து விட்டு மாணவியும் அதே வழியில் நடந்து வர சிவா அந்த மாணவியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

பின்னர் தனது வீடு அருகில் இருப்பதாகவும் அங்கு வந்து செல்லும் படி சிவா மாணவியிடம் விளையாட்டாக கேட்டுள்ளார். இதையடுத்து மாணவியும் சிவாவின் பேச்சை கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளாள். இதையடுத்து மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்ற சிவா வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

சில நாட்கள் செல்ல மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்றுவலி கடமையாகவே தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த செய்தியை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் மாணவியிடம் இதற்கு யார் காரணம் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து மாணவி பதறிப்போய் அனைத்து உண்மையையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் உடனே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையில் மாணவி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.