உயிருக்கு போராடிய அண்ணன்! 4கிமீ தள்ளுவண்டியில் தள்ளிப் சென்ற தங்கை! உதவ யாரும் முன்வராததால் ஏற்பட்ட சோகம்! விழுப்புரம் அதிர்ச்சி!

புதுச்சேரியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் தள்ளுவண்டியில் உடல்நிலை சரியில்லாதவரை அழைத்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் ஒளிந்தியப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் அவரை பார்ப்பதற்காக அவரது தங்கையும் கணவர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது திடீரென மல்லிகாவின் கணவர் சுப்பிரமணியன் மயங்கி விழுந்தார்.

உடல்நிலை சரியில்லாத அவரை மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வாகன வசதி இல்லாத காரணத்தினாலும், அவசர ஊர்தி எண் 108 அழைப்பதற்கு செல்போன் வசதி இல்லாததாலும் அவர் செங்கல் சுமந்து செல்லும் தள்ளுவண்டியில் தூக்கிச் செல்லப்பட்டார். இதனை அப்பகுதியில் உள்ள சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது குடும்பம் சோகத்தில் செய்வதறியாமல் அழுதது. பின் அவரது உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு பின் காவல்துறையினரால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராமல் அதனை சமூக வலைத்தளத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பிய சம்பவம் வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.