உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட 5 குட்டிகள்! ஒரு கிராமத்தையே பழி தீர்க்க சுற்றி வரும் தாய் சிறுத்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுத்தை பீதியில் மக்கள் உறைந்து போய் உள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது அவசாரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் சரசரவென சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விவசாயி ஒருவர் பாம்பு ஒன்று குட்டி போட்டுள்ளதாக நினைத்துள்ளார். அவற்றை மொத்தமாக கொல்வதற்காக விவசாய கழிவுகளுக்கு அந்த விவசாயத்தை வைத்துள்ளார்.

தீ முழுவதுமாக இருந்த பின்னர்தேடுதல் வேட்டை நடத்திய போது தான் கிராம மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. பாம்பு குட்டிகள் என நினைத்து தீ வைத்த அந்த விளைநிலத்தில் 5 சிறுத்தை குட்டிகள் உடல் கருகி உயிரிழந்த கிடந்தன. ஒரு பாம்பு ஒன்றும் கருகிய நிலையில் கிடந்தது.

அந்த சமயத்தில் தாய் சிறுத்தை வேட்டைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஐந்து சிறுத்தை குட்டிகளை கொலை செய்த அந்த விவசாயியும் கிராம மக்களும், எங்கு தாய் சிறுத்தை தனது குட்டிகளை தேடி களைத்த பின்னர் தங்களை பழிவாங்க கூடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதனால் வனத்துறையினர் அந்த கிராமத்தில் தயார் நிலையில் உள்ளனர்.