விக்கிரவாண்டி தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி திட்டமிட்டபடி காலை 8 மணிக்குத் தொடங்கியது.
விக்கிரவாண்டி முதல் சுற்று நிலவரம்! அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலை!
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுவது வழக்கம் என்றாலும், முதல் சுற்றுக்குப் பிறகு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதல் சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியைவிட அ.தி.மு.க. வேட்பாளர் சுமார் ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலைமையே தொடர்ந்து நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயம் அ.தி.மு.க. தொண்டர்களிடமும் பா.ம.க. தொண்டர்களுக்கும் மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளது.