தேர்தல்ல தேமுதிக ஜெயிச்சா தான் அப்பா குணமாவார்! சென்டிமென்டாக தாக்கிய சின்ன கேப்டன்!

இதோ இன்னும் ஐந்தே தினங்களில் தேர்தல் பிரசாரம் முடிய இருக்கிறது


. இனியும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு வரமாட்டார் என்பதை உறுதி செய்யும் வகையில், இன்று அவரது மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.இன்று விருதுநகர் தொகுதியான டி.கல்லுப்படியில் விஜயபிரபாகரன் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது விஜயகாந்த் உடல்நிலை குறித்துப் பேசினார். 

நமது கேப்டன் உடல் குணமாவது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் வோட்டு போட்டு தே.மு.தி.க.வை ஜெயிக்க வைத்தால், அந்த சந்தோஷத்தில்தான் கேப்டன் உடல் நன்றாக மாறும். அதனால் மறந்துவிடாமல் ஓட்டு போடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

அடுத்த நொடியிலே தன்னுடைய பாணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டார் விஜயபிரபாகரன். எட்டு வழி சாலை குறித்து அன்புமணியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக சொன்ன உதயநிதி, என்னுடன் இலங்கையில் நடந்த படுகொலை குறித்து விவாதம் நடத்த வருவாரா என்று கேள்வி எழுப்பினார்

அன்புமணிக்காக விஜயபிரபாகரன் இத்தனை இறங்கிப் பேசினாலும், தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளில் பாட்டாளி கட்சியினர் யாரும் மனமுவந்து வேலை பார்க்கவில்லை. அதனாலே இப்படி பேசியாவது அன்புமணியை கரெக்ட் செய்ய நினைக்கிறார் விஜயபிரபாகரன்.