விஜயகாந்துக்கு பி.எம்.டபிள்யு. கார் கொடுக்க மட்டும் எப்படி பணம் வந்திச்சு? கேள்விகளால் மனம் உடைந்து அழுத விஜயபிரபாகரன்!

தந்தை நலமாக உள்ளதாகவும் அவரது உடல்நிலை குறித்து சிலர் தவறாக பேசுவதால் மனம் வருந்தியுள்ளதாகவும் தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயாகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க மேடையில் பேசினார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய 68வது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் நலத் திட்டட உதவிகள் வழங்கினார். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்காக 1.50 கோடி மதிப்பிலான 1,500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கினார்.

நீண்ட நேரம் நின்று கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் திடீரென நிலை தடுமாறி கீழே சரிந்தார். உடனே அவரை பிரேமலதா, சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தாங்கிப் பிடித்து அமர வைத்தனர்.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் தடுமாறி விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நெட்சிசன்கள் சிலர் விஜயகாந்த் குறித்து அவரது கட்சி குறித்தும் கிண்டலடித்து பேசினர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் உமராபாத்தில் விஜயகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய பிரபாகரன் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கி பின்னர் பேசினார். அப்போது தந்தை விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

தை மாதத்திற்கு பின் தந்தை பூரண குணமடைந்து வீறுநடை போட்டு வருவார் என தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக பேசினார் விஜயகாந்த். தந்தை மிகவும் நலமாக உள்ளதாகவும் மேடையில் அழுதுகொண்டே விஜய பிரபாகர் பேசியது தொண்டர்களின் மனதை உருக வைத்தது. நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

தாய் பிரேமலதா தந்தையின் உடல்நிலையை சீராக வைத்து அவரை பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் விஜய பிரபாகர் பேசினார். . தந்தையின் உடல்நிலை குறித்து பல்வேறு தரப்பினர் அவதூறாக பேசினால் அதையெல்லாம் சிங்கம் போல் தாங்கிக் கொண்டு தனது தாயார் பிரேமலதா கட்சியையும் தொண்டர்களையும் வழிநடத்தி செல்வதாக அழுது கொண்டே பேசினார்.

வாங்கி கடனை திருப்பி செலுத்தவில்லை என வங்கி நோட்டீஸ் அனுப்பிய நேரத்தில் பணம் இல்லை என தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் தந்தையின் பிறந்த நாளில் அவருக்கு பி.எம்.டபிள்யு காரை பரிசாக கொடுக்கவும், பிறந்த நாளுக்கு தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கவும் பணம் இருக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேட்டது எங்களுக்கு கேட்கவில்லை.