உள்ளாட்சி வசூலில் விஜயகாந்த் கட்சியும் இறங்கியாச்சு! ரெடியா வேட்பாளர்களே?

உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


ஆனால், அதை பற்றி கவலையே இல்லாமல் எடப்பாடியும், ஸ்டாலினும் இந்த போட்டியில் இன்று விஜயகாந்த் கட்சியும் குதித்துவிட்டது. இன்று அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது. 

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2019 உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 15.11.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 25.11.2019 திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேயருக்கு 15 ஆயிரமும், கவுன்சிலருக்கு 4,000 எனவும் மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேவையான அளவுக்குப் பணம் போட்டு வசூல் வேலையில் இறங்கிவருகின்றனர்.னும் இப்போதே வேட்பாளர்களிடம் வசூல் வேட்டையைத் தொடங்கிவிட்டார்கள்.