பிணவறைக்கு நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம் என்று சுகாதாரத்துறை அமைச்ச்ர விஜயபாஸ்கர் கருணாசிடம் கூறியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
வாங்க பிணவறைக்கு சேர்ந்தே போவோம்! கருணாசை அதிர வைத்த விஜயபாஸ்கர்!

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திருவாடனை எம்எல்ஏ கருணாஸ் பேசினார். அப்போது தனது தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் பிணவறை சீர்குலைந்து உள்ளதாக கூறினார். அதனை சரி செய்யவில்லை என்றால் தன்னால் தொகுதி பக்கமே செல்ல முடியாது என்று கருணாஸ் கூறினார்.
மேலும் அடுத்த தேர்தலில் தான் வாக்கு கேட்டுச் செல்ல வேண்டும் என்றால் எனது தொகுதியில் உள்ள பிணவறையை சீர் செய்து தர அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வர வேண்டும் என்றார். இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். பிணவறை சிதைந்து கிடப்பதாக தற்போது நீங்கள் கூறித்தான் தனக்கு தெரியும் என்றார் விஜயபாஸ்கர். அதோடு மட்டும் அல்லாமல் உடனடியாக பிணவறை நவீன வசதியுடன் சரி செய்யப்படும் என்றார்.
மேலும் சரி செய்யப்பட்ட பிணவறையை திறக்க நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம் என்று விஜயபாஸ்கர் கூறினார். என்னது பிணவறைக்கு சேர்ந்தே செல்வதா? என்று கேட்டு கருணாஸ் திடுக்கிட மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அதற்கு திறப்பு விழாவிற்கு செல்லலாம் என்பதைத்தான் தான் அப்படி கூறியதாக விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.