திருநங்கை கவிஞருக்கு காதல் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கேரளாவில் திருநங்கை கவிஞர் ஒருவர் இளைஞரை காதலித்து கரம்பிடிக்கவுள்ளார். திருநங்கை இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்வது கேரளாவில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் கவிஞர் விஜய ராஜமல்லிகா இவர் பல்வேறு கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லமை பெற்றவர். இவரது படைப்புகள் பல பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இவர் திருச்சூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவரின் படைப்பான "தெய்வத்தின்டே மக்கள்" என்ற படைப்பு சென்னை முதுமலை மலையாள இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது பல்வேறு படைப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கவிஞர் விஜய் ராஜமல்லிகாவும் திருச்சூர் அருகிலுள்ள மண்ணுதியை சேர்ந்த ஜாஸிமும் முதலில் நண்பர்களாக பழகியுள்ளனர். பின்னர் இருவரும் தன்னார்வ தொண்டில் அதிக அளவில் பணியாற்றியதால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்நிலையில் தங்களது காதலை இருவரும் பெற்றோர்கள் வீட்டில் தெரிவித்துள்ளனர். அதற்கு ஜாஸிம் வீட்டில் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களது திருமணம் வரும் சனிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.