மனம் கவர்ந்த நாயகனுடன் இணைகிறேன்! விஜய் டிவி டிடியின் செம ஹாட் அறிவிப்பு!

டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.


விஜய் டிவியில் காபி வித் டிடி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. நளதமயந்தி படத்தின் மூலம் இவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தனுஷ் நடித்த பவர் பாண்டி, சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் என்ற படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது திவ்யதர்ஷினி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத் தயாரித்து வருகிறார்.

ஆகாஷ் பூரி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சார்மி கவுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திவ்யதர்ஷினிக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் திவ்யதர்ஷினி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திவ்யதர்ஷினி கூறியுள்ளார். ஆகாஷ் பூரி தனது இதயம் கனிந்த கதாநாயகன் எனக் குறிப்பிட்டுள்ள திவ்யதர்ஷினி, தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் அணில் பதூரி, தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், மற்றும் திரைப்படக் குழுவினருக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டிடி குறிப்பிட்டுள்ளார்.