அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் சேதுபதி வாய்ஸ்! அரவக்குறிச்சி ஆடியோ!

அதிமுக.,விற்கு ஆதரவாக பேசியதாகக் கூறி, ஒரு ஆடியோ பரவி வருவதை, விஜய் சேதுபதி மறுத்துள்ளார்.


கரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி வாக்கு சேகரிப்பதாகக் கூறி, ஒரு ஆடியோவை, சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அதில், ஒருவர் விஜய் சேதுபதி போலவே, அச்சு  அசலாகப் பேசுகிறார். பிரத்யேகமாக இதற்கென ஸ்கிரிப்ட் எழுதி, அதனை வாசிக்கும் அவர், இறுதியாக, அதிமுக கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஓட்டு போடும்படி, கேட்டுக் கொள்கிறார்.

இதைக் கேட்பவர்களுக்கு நிஜமாகவே, விஜய் சேதுபதிதான், பேசியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி விஜய் சேதுபதி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், '' அதிமுக பிரசாரத்திற்காக, என்னோட வாய்ஸ் ஏன் பயன்படுத்தினாங்க என்று தெரியலை. என் ரசிகர்களும் இதுபற்றி என்கிட்ட சொன்னார்கள்.

அதன்பின்தான் எனக்கே இந்த விசயம் தெரியும். எனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரலே இல்லை,'' என்று விஜய் சேதுபதி மறுத்துள்ளார்.  அரசியல் ரீதியாக வெளிப்படையாகப் பேசி வரும் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவரே கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்.