த்ரிஷா, ஸ்ருதி, அஞ்சலியை தொடர்ந்து இனியாவுக்கு வாழ்க்கை கொடுத்த விஜய் சேதுபதி!

வாகை சூடவா திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இனியா.


கிராமத்து பெண்ணாக வாகை சூடவா படத்தில் நடிப்பில் அசத்திய இனியா பின்பு ஒரு சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படங்கள் ஏதும்  எதிர்பார்த்த அளவு வெற்றிஅடையாத காரணத்தினால் தற்போது மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இனியா வேறு ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது ஆல்பம் பாடல் ஒன்றை தயாரித்து அதில் நடித்தும் வருகிறார். வானத்தில் பறக்க  சிறகுகள் என தொடங்கும் இந்த பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலை தளத்தில் ஷேர் செய்து அந்த பாடலை ப்ரோமோட் செய்துள்ளார்.

நடிகை இனியாவின் புது முயற்சிக்கு உதவும் வகையில்  நடிகர் விஜய் சேதுபதி அந்த பாடலை ஷேர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பீல்ட் அவுட் ஆகியிருந்த நடிகை த்ரிஷாவிற்கு 96 படம் மூலமும், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ஒரு புதிய படம் மூலமாகவும் விஜய் சேதுபதி கை கொடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் பீல்ட் அவுட் ஆன இனியாவிற்கு விஜய் சேதுபதி கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பீல்ட் அவுட் ஆன அஞ்சலிக்கும் கூட அண்மையில் சிந்துபாத் மூலமாக விஜய் சேதுபதி வாழ்க்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.