மயிலாடுதுறையில் மண் சோறு சாப்பிட்டு விஜய் ரசிகர்கள்..! நெகிழ வைக்கும் காரணம்..!

விஜய் நடித்த பிகில் படம் திரையிடுவதில் எந்த சிக்கலும் வரக் கூடாது என்பதற்காக நாகை மாவட்ட விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.


விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் உதவி இயக்குநர் செல்வா, பிகில் படத்தின் கதை தன்னுடையது என உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நாகை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் மயிலாடுதுறையில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். இந்த பூஜையின் போது விஜய் ரசிகர்கள் அவரின் பிகில் திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தீபாவளிக்கு வெளியாகவேண்டும் என்றும் ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்றும், அவரும் அவரது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

அவர்கள் மண்சோறு சாப்பிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் படம் வெற்றி பெற பூஜை போடப்பட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தமிழகம் எங்கும் உள்ள ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பிகில் படத்தை திரையிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்த செல்வா, உரிமையியல் நீதிமன்றத்தை மீண்டும் நாட உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.