ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அடுத்த நிமிடம்! தெறிக்க விட்ட தளபதி ரசிகர்கள்!

ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சில நிமிடங்களிலேயே கட் அவுட் வைத்து விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டுள்ளனர்.


நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்திற்கு பிகில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதற்காகவே காத்திருந்த விஜய் ரசிகர்கள் உடனடியாக செய்ததுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மாலை 6 மணி அளவில் first look வெளியான நிலையில் அடுத்த சில நிமிடங்களில் first லுக்கில் இருப்பது போன்றே கட்அவுட்டை உருவாக்கி விஜய் ரசிகர்கள் அசர வைத்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் வைத்துள்ள இந்த கட்டவுட் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் மீது வெறித்தனமான பாசம் கொண்ட ரசிகர்கள் தான் இந்த கட் அவுட்டை உடனடியாக நடித்துள்ளனர்.

இதேபோல் நாளை விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இருப்பது போன்ற கட் அவுட்களை ரெடி பண்ண அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாளை பிகில் திரைப்படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காகவும் ரசிகர்கள் தற்போது முதலே காத்துக் கிடக்கின்றன.