நாளை இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பொதுவான ஹாஷ்டேக் மூலம் இன்று முதலே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் அநாகரீகமாக மோதிக் கொள்ளும் ரசிகர்கள்! வேடிக்கை பார்க்கும் விஜய் - அஜித்!
இந்நிலையில் தல ரசிகர்கள் பலர் தளபதி விஜய்யை இழிவுபடுத்தும் முறையில் டுவிட்டர் பக்கத்தில் '# ஜூன் 21 விஜயின் இறந்த தினம்' என்னும் ஹேஷ்டேக்கை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இது தளபதி ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'தளபதி 63' இந்த படத்தின் அப்டேட் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தளபதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேபோல் ஜூன் 21 மாலை 6 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
ஜூன் 22ஆம் தேதி படத்தின் இரண்டாவது லுக் நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமான அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டார். இந்நிலையில் தளபதி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தல ரசிகர்கள் விஜய்டெத் டே என ட்விட்டரில் பதிவிட்டதால் மிகுந்த கோபத்தில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.
இதற்கு போட்டியாக அஜித்தின் டெத் டே என்று தளபதி ரசிகர்கள் டிரென்டாக்கினர். இது மிகவும் வைரலான நிலையில் சில விஜய் ரசிகர்கள் இதனை கண்டித்து அந்த டிரென்டிங்கை நிறுத்தினர். ஆனால் தல ரசிகர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் விஜயை அநாகரீகமாக விமர்த்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே 'தளபதி' படம் வந்தால் தல ரசிகர்கள் டுவிட்டரில் அவதூறாக பதிவிடுவது 'தல' படம் வந்தால் தளபதி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அவதூறு பரப்புவதும் சகஜமான நிலையில் இருந்து வருகிறது.'தல'பிறந்தநாள் அன்று தளபதி ரசிகர்கள் சிலர் ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை கிண்டல் அடிக்கும் வண்ணம் அவதூறாக பேசி விட்டதாக ரசிகர்கள் பலர் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தல மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனை விஜய் மற்றும் அஜித் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.