தொகுதிப் பங்கீட்டில் கடும் அதிருப்தியில் விடுதலை சிறுத்தைகள்... தொல்.திருமாவளவன் கப்சிப்

200 தொகுதிகளில் தி.மு.க. நிற்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறது தி.மு.க. அதனால், கூட்டணிக் கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்கு வலியுறுத்தி வருகிறது. அப்படியொரு சிக்கல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் ஆவேசத்தில் இருக்கிறது என்பதுதான் தகவல்.


திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒன்றை மட்டும் குறைத்து 9 தொகுதிகள் வேண்டுமென விடுதலை சிறுத்தை வலியுறுத்தி வருகிறது. அதுவும், தனித் தொகுதிகளுடன் பொது தொகுதிகள் சிலவற்றையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதாக சொல்லப்படுகிறது. 

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை வழங்க திமுக மறுப்பு தெரிவித்து வருகிறது.திமுகவின் இந்த பிடிவாதத்தினால் அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், 5 தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்றால், திமுகவுடன் அப்படியொரு கூட்டணி தேவையில்லை என திருமாவளவனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், விரைவில் கூட்டணி மாற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 

நம்பி காத்திருந்தவர்களை இப்படி தி.மு.க. கழுத்தறுக்கலாமா என்று சிறுத்தைகள் புலம்புகிறார்கள்.