திருமாவை திட்டினால் கொன்னுப்புடுவோம். ராணிப்பேட்டையில் அடாவடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள்!

அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்துக்கோயில் என்று திருமாவளவன் பேசிய விவகாரம் இந்து மக்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.


இந்த நிலையில், திருமாவின் இந்து எதிர்ப்பு பேச்சு குறித்து விமர்சனம் செய்த பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் வைத்து அடித்திருக்கிறார்கள். ராணிப்பேட்டையை சேர்ந்த கலைஞர் பாதை என்ற பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியருமான குணசேகரன் என்பவர் முகநூலில் தொல்.திருமாவளவனை பற்றி பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

உடனே அந்தப் பதிவுக்கு கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ், காரை.தமிழ் மற்றும் நிர்வாகிகள் சிலர் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் அவர்கள் முத்துகடை பகுதியில் வழிமறித்து நடுரோட்டில் வைத்து நாயை அடிப்பது போன்று அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கருத்துப்பதிவை கருத்துப்பதிவால் எதிர்நோக்காமல் பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் வைத்து நாயை அடிப்பது போன்று அடித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமா இதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா அல்லது இதுவும் அசிங்கம் என்று கடந்து செல்வாரா..?