சீமானை கைவிட்ட விடுதலைப் புலிகள்! நாளை கைதாகிறார் சீமான்!

திடீரென இந்தத் தேர்தலில் பரபரப்பைக் கிளப்பிவிட்டார் சீமான். ராஜீவ் படுகொலை பற்றி பலரும் பேசுவதற்குத் தயங்கும் நிலையில், ‘நாங்கள்தான் கொன்றோம்’ என்று தன்னையும் அந்தக் கொலையில் இணைத்துக்கொண்டார்.


இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற சகல கட்சிகளையும் கன்னாபின்னாவென்று திட்டி தன்னுடைய வீரத்தைக் காட்டினார். அதேபோன்று தான் பேசியதை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.

சீமானுக்கு ஆதரவாக யாருமே பேசாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து இன்று ஓர் கண்டனக் கடிதம் வெளியிட்டு உள்ளனர். சீமானுக்குப் பதில் அளிக்கும் வகையில், ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

மேலும், நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள் இயக்கம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இயக்கம். விடுதலைப் புலிகள் இல்லையென்றால், பேச்சுவார்த்தை மூலம் சகல பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் சொன்னது எத்தனை பொய் என்பதை உலகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இப்போது சீமானை விடுதலைப் புலிகளும் கைவிட்ட நிலையில், இனி அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முடியாது என தெரியவந்துள்ளது. நாளை விக்கிரவாண்டி தொகுதிக்கு பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார் சீமான். அந்த நேரம் நிச்சயம் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.