சூட்டிங் முடிந்த பிறகும் அந்த நடிகைக்காக காத்திருந்த அஜித்! யார் தெரியுமா?

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை வித்யா பாலன், தமிழ் திரையுலகில் "தல" அஜித் நடிப்பில் உருவாகும் நேர்கொண்டப்பார்வை மூலம் கால் பதித்து உள்ளார்.


இவர் கடந்த வருடம் NTR கதாநாயகடு என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆனார். தற்போது இவர் இயக்குனர் H.வினோத் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் "நேர் கொண்ட பார்வை"  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகினார்.  இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். 

இந்தியில் பெரும் வெற்றியை பெற்ற "பிங்க்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் அஜித் நடிப்பில் வெளியாகும் "நேர் கொண்ட பார்வை". இந்த திரைப்படத்தில் ஹிந்தியில் பிரபல முன்னனி நடிகையான வித்யாபாலன்,  அஜித்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பல சுவாரசியமான தகவலைகளை தற்போது பகிர்ந்து கொண்டார்.  அதிலும் குறிப்பாக நடிகர் அஜித்தின் எளிமையை பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.

அஜித், படப்பிடிப்பின் போது தன்னுடைய வேலை முடிந்த பின்பும் வித்யா பாலனுக்காக அவரது வேலை முடியும் வரை காத்திருந்து பின்பு அவரை வழி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த பண்பு நடிகை வித்யா பாலனை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

வித்யா பாலன் காரில் ஏறி சென்ற பின்பு தான் அஜித்தும் தன்னுடைய காரில் ஏறி சென்றுள்ளார். இத்தகைய குணம் மிகவும் தன்னை ஆச்சர்யப்படுத்தியதாக வித்யாபாலன் கூறினார்.

இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாகும் என படக் குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.