பைப் உடைந்து வீணாக வெளியேறிய நீர்! உடைப்பை அடைக்க படாத பாடு! நெகிழ வைத்த குரங்கு!

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதை தடுக்க குரங்கு போராடும் காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தண்ணீரை வீணக்கக்கூடாது என்பதை விலங்குகளே வந்து மனிதர்களுக்கு அறிவுரை சொல்வேண்டிய காலக் கட்டத்திற்கு நாம் சென்றுவிட்டோம் என்றே தோன்றுகிறது இந்த குரங்கின் செயல். 

ஒவ்வொரு நாளும் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் லாரி பின்னால் ஓடுவதும், தண்ணீர் வரவில்லை என்றால் அரசாங்கத்தின் மீது பழியை போட்டு சாலைமறியல் செய்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் என்றே சொல்லலாம்.

ஒரு இடத்தில் செல்லும் குழாயில் இணைப்பு பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று முதலில் தண்ணீரில் தனக்கு ஏற்பட்ட தாகத்தை தீர்த்துக் கொள்கிறது. பின்னர் தண்ணீர் வீணாக வெளியில் செல்வதை பார்க்கும் அந்த குரங்கு எப்படியாவது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என முயற்சிக்கிறது. அங்கு இருக்கும் சில இலைகளை கொண்டுவந்து குழாயை மூட முயற்சிக்கிறது.

ஆனால் அந்த இலைகளால் குழாயை மூட முடியாது என அந்த குரங்கிற்கு தெரியாவிட்டாலும், தண்ணீரை வீணாக்கக்கூடாது என அதற்கு தெரிந்திருப்பதை கண்டு அனைவரும் வியக்கின்றனர். இந்த வீடியோவை கடந்த அக்டோபர் 10ம் தேதி நிஹாரிகா என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ஆயிரக்கணக்கானோர் பார்த்து மறுபதிவிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற உண்மையை அந்த குரங்கு உணர்த்தி உள்ளதாக இந்த வீடியோ எடுத்தவர் நமக்கு கூறுகிறாராம். அதெல்லாம் சரி... வீடியோ எடுப்பதற்கு பதில் ஓடிச் சென்று அந்த குரங்கிற்கு உதவி செய்து தண்ணீர் வீணாகாமல் தடுத்திருக்கலாமே என்றுதானே கேட்கிறீர்கள்?.... சரி... அடுத்த செய்திக்கு போவோம்...