நடுக்காட்டில் மகனுடன் விஜய்சேதுபதி சண்டை! வைரல் வீடியோ உள்ளே!

நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுடன் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.


தமிழ் திரையுலகில் மக்கள் செல்வன் என போற்றப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது மகனான சூர்யா, விஜய் சேதுபதி நடித்து இருந்த  நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருப்பார். தற்போது சிந்துபாத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய நடிகர் விஜய் சேதுபதியின் நண்பர் எஸ் யூ அருண் குமார் இயக்குகிறார். நடிகை அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது மகனுடன் சண்டையிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

கையைப் பிணைத்துக் கொண்டு மாறி மாறி இருவரும் சண்டையிட்டு கொள்ளும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மகனின் தலை முடியைப் பிடித்து விஜய் சேதுபதி இழுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

சண்டை முடிந்த உடன் தனது மகனின் கன்னத்தில் விஜய்சேதுபதி முத்தமிடுகிறார். இந்த காட்சிகள் சிந்துபாத் திரைப்பட படப்பிடிப்பின் போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.