பிரமாண்ட மலைப்பாம்பு..! வாய் வழியாக அடுத்தடுத்து வெளியேற்றிய முட்டைகள்..! கடலூர் அதிர்ச்சி!

கடலூர் அருகே கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய பாம்பு ஒன்று மக்களிடம் சிக்கியதால் பயத்தில் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


கடலூர் அருகே அடைகாத்த பூலோகநாதர் கோவில் பகுதியில் பைஜான் என்பவர் வீட்டில் கோழி வளர்க்கிறார். அவர் வீட்டில் இருந்த கோழி ஒன்று குஞ்சுகள் பொறிப்பதாக முட்டைகளை அடைகாத்து வந்தது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியில் வருவதற்கு சில நாட்களே இருந்தது. இதற்கிடையே அதிகாலையில் கோழி அடைகாத்திருந்த கூண்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்து கோழியை கொன்றுவிட்டது.

பின்னர் அங்கு அடைக்காக்கப்பட்டிருந்த முட்டைகளில் 3 முட்டையை விழுங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பாம்பு பிடிக்கும் நபரான செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்தார். அந்த இடத்திற்கு வந்த செல்லா லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்தார்.

தான் பிடிபட்டதை அறிந்துகொண்ட பாம்பு இனிமேலும் தப்பிக்க முடியாது என்ற தருணத்தில் விழுங்கிய மூன்று முட்டைகளையும் அடுத்தடுத்து கக்கியது. அதன்பிறகு அந்த பாம்பு காப்பு காட்டில் விடப்பட்டது. சாதாரணமாக கோழிகள் முட்டையை பாம்புகள் விழுங்குவது கிடையாது. ஆனால் அதே சமயம் கோழிகள் அடைகாக்கும் முட்டையை மட்டுமே பாம்புகள் விழுங்கும் என்பது கூடுதல் தகவல்.