ஒன்னு ஒன்றா கழட்டனும்..! முதல்ல நீங்க பிறகு நான்..! வீடியோ கால் மூலம் பெண்ணிடம் வீழ்ந்த சபல கேஸ் என்ஜினியர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

பெங்களூரு: நிர்வாணமாக வீடியோ சாட்டிங் செய்த ஆணை படம்பிடித்து பணம் பறித்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.  

பெங்களூருவைச் சேர்ந்த என்ஜீனியர் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்கூட பழக தொடங்கியிருக்கிறார். அந்த பெண் தன்னை பிரியா சிங் எனக் கூறிக் கொண்டுள்ளார். அந்த என்ஜீனியரின் மனைவி பிரசவத்திற்காக, அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இதனால், சில நாள் இடைவெளிக்குள்ளாக ஆன்லைனில் பிரியாவுடன் அவர் நெருங்கிப் பழகியிருக்கிறார். அப்படி இப்படி ஆரம்பித்த சாட்டிங் இறுதியாக செக்ஸ் சாட்டிங்கிற்கு சென்றுள்ளது.  

இருவரும் வாட்ஸ்ஆப்பில் நம்பர் பரிமாறிக் கொண்டனர். இதன்பேரில் அக்டோபர் 28ம் தேதி இரவு என்ஜீனியர் நிர்வாண நிலையில் பிரியாவுக்கு வீடியோ கால் செய்ய, அந்த பெண் சிரித்தபடி சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். இரவு முழுக்க இப்படியே சில முறை என்ஜீனியர் முயற்சிக்க, பிரியா அழைப்பை துண்டித்திருக்கிறார். இரவெல்லாம் 'போனை' கையில் பிடித்தபடி படுத்துறங்கிய என்ஜீனியருக்கு அடுத்த நாள் அபாயம் வந்துள்ளது. ஆம், இரவு செய்த நிர்வாண வீடியோ அழைப்பை ரெக்கார்ட் செய்துள்ளதாகவும், உடனடியாக ரூ.30,000 பணம் தரவேண்டும் எனவும் பிரியா சிங் மிரட்டியுள்ளார்.  

இதற்குப் பயந்து என்ஜீனியர் ரூ.30,000 பணம் அனுப்பியிருக்கிறார். ஆனாலும், கூடுலாக ரூ.15,000 கேட்டு பிரியா மிரட்டவே, என்ஜீனியர் வேறு வழியின்றி தற்போது போலீஸ் உதவியை நாடியுள்ளார். குறிப்பிட்ட பெண்ணின் அலைபேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவர் யாரேனும் மோசடி ஆசாமியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.