கடல் நீரை அசுத்தமாக்கும் விஜிபி அம்யூஸ்மென்ட் பார்க்! கழிவு நீரை கலந்துவிடுவதாக பரபரப்பு புகார்!

சென்னை: சென்னையில் உள்ள விஜிபி அம்யூஸ்மென்ட் பார்க்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கடலில் கலப்பதாக, புகார் எழுந்துள்ளது.


கடந்த 6 மாதங்களாக, சென்னையை அடுத்த அக்கரை கடற்கரை பகுதியில் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் பொதுமக்கள் இந்த புகாரை தெரிவித்து வருகின்றனர்.

அங்கு செயல்படும் விஜிபி அம்யூஸ்மென்ட் பார்க், நேரடியாக, கழிவுநீரை கடலில் கலப்பதாகவும், இதனால் கடற்கரையோரம்  மட்டுமின்றி கடல்நீரும் கடுமையான சீர்கேடு அடைந்துள்ளது. 

முறையாக சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை அப்படியே நேரடியாக, கடலில் கலப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்பதுடன், இது சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது.

இதனால், மக்கள் இங்கே வசிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது, என, அங்கு வாக்கிங் செல்வோர் மட்டுமின்றி சுற்றுப்புற மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 6 மாதங்களில், விஜிபி பார்க்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அதிகளவில் உள்ளதால், அதனைச் சுற்றியுள்ள மணல் பரப்பு கருமை நிறத்திற்கு மாற தொடங்கியுள்ளது.

இதனால், அக்கரை கடற்கரை பெரும் சுகாதார சீர்கேடை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.