வாழ்வின் ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் இரகசியம் இது தான்!

வாழ்வின் உயர்வை எட்டுவது மனிதனுக்கு ஒவ்வொரு மனிதனின் விருப்பம். ஆனால் வாழ்க்கையை தாறுமாறாக வாழ்வதின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தோல்வியினால் துவண்டு துன்புறுகிறார்கள்.


உரலில் அகப்பட்டது போலஓயாத போட்டிகள் நிறைந்த, சந்தைக்கடை போன்ற இந்த உலகில் மக்கள் சிக்கி நசுங்குகின்றனர். தனி மனிதன் ஒவ்வொருவனும் தன்னுடைய திறமைகளை முழுமையாக பயன்படுத்தும் கலையை மட்டும் கற்றிருந்தால் மனித சமுதாயத்தின் எதிர்காலம் துன்பம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மனிதன் இயற்கையாகவே முழுமையானவன். ஒவ்வொரு மனிதனிடமும் எல்லையற்ற ஆற்றல் மறைந்து கிடைக்கின்றன. நம்முடைய வாழ்க்கையை மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு வேண்டிய திறமையும், சக்தியும், ஆற்றலும் மனிதனிடம் நிறைந்திருக்கின்றன. நம்முள் புதைந்து கிடக்கும் இந்த சக்தியினை, திறமையினை இனங்கண்டு கொண்டு அதனை முழுமையாகவும், திறமையாகவும் கையாளும் ஆற்றல் தான் வெற்றிக்கு முதல் படி ஆகும்.

நம்முள் இருக்கும் திறமை அனைத்தையும் புரிந்து கொண்டு அவற்றை மேலும், மேலும் வளரச் செய்யும் வகையில் வாழும் வாழ்க்கைதான் பயனுள்ள வாழ்க்கையாகும். இந்த முயற்சியில் நாம் எத்துணை வெற்றியை எட்டுகிறோம் என்பது நம் குணத்திலும், நடத்தையிலும் ஆளுமையிலும் நாம் எத்தகைய மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்பதை பொறுத்ததாகு

 நமக்கு எத்தனை ஆற்றல்கள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல. அவற்றில் எத்தனை ஆற்றல்களை நாம் வளர்த்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒரு மனிதனுக்கு பல ஆற்றல்கள் இருக்கலாம். இருப்பினும் வாழ்க்கையில் அவன் பெரிய தோல்விகளை சந்தித்தவனாக இருப்பான். தனக்குள்ள ஆற்றல்களை நடைமுறையில் சரிவர பயன்படுத்துபவன் தான் வெற்றி பெறுவான்.

 நாம் எவ்வாறு முன்னேற்றம் அடைகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. நாம் சக்தியற்றவர்கள், திறமையற்றவர்கள், அற்பமானவர்கள் என்று தவறாக அவசரப்பட்டு எடுக்கும் முடிவே வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தோல்விகளுக்கு காரணம். நம் உள்ளத்தில் ஆன்மீக சக்தி எப்பொழுதும் இருக்கிறது. படைப்புக்குக் காரணமான இந்த ஆதார சக்தியை தியானத்தின் மூலம் அடைய வேண்டும். இச்சக்தி நாம் செயல்படுவதற்கு வேண்டிய சக்தியையும், உறுதியையும் அளிக்கும். நம்முள்ளே இருக்கும் இந்த சக்தியை இனங்கண்டு கொண்ட பிறகு அதனை நம் செயலில் முழுமையாகவும், முறையாகவும் பயன்படுத்தினால் நாம் வெற்றி அடைவது நிச்சயம்.

அனாவசிய கவலைகளை மனதில் கொள்ளாமல் இருப்போம். மனதில் உறையும் இறைவனுக்கே நமது முயற்சிகள் அனைத்தையும் சமர்ப்பிப்போம். ’இறைவா உன் திருவுளப்படி அனைத்தும் நடக்கும்’ என்ற எண்ணத்துடன் நம் செயல்கள் அனைத்தையும் மேற்கொள்வோம். ஆன்மீக சக்தி உள்ள மனிதனிடம் மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை, மனிதாபிமானம், அஞ்சாநெஞ்சம், துன்பங்களை தாங்கிக் கொள்ளும் துணிவு ஆகியவை நிறைந்திருக்கும். கவலையை விட்டொழியுங்கள். நாம் எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டியதில்லை. கவலை என்பது ஆன்மீக பலவீனத்தின் ஒரு வெளிப்பாடுதான். தன்னம்பிக்கையின்மையைத்தான் அது காட்டுகிறது. வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் சோதனைகளை நாம் சந்திக்க நேர்வது இயற்கையே. அத்தகைய சமயங்களில் நாம் அஞ்சி நடுங்கக் கூடாது.

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு நம் எல்லோருக்கும் அளவற்ற மனோ தைரியம் தேவை. எங்கும் நிறைந்துள்ள, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, அனைத்துச் சக்தியையும் தன்னுள் அடக்கியுள்ள இறைவனிடம் நாம் நெருங்கி செல்ல செல்ல நம்முள்ளே அடங்கிக் கிடக்கும் அளவற்ற ஆற்றலை நாம் உணர்வோம். நம்முடைய நம்பிக்கையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டோமேயானால் நம்முடைய தைரியம் அதிகரிக்கும். நம்முடைய செயலாற்றும் திறமை கூடும். இறைவனுடன் நம்மை ஒன்றிணைத்துக் கொள்ளும் பொழுது மிக கடினமான சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் பலம் நமக்கு கிடைக்கும்.

இதுவே வெற்றியின் ரகசியம்