தினகரன் கட்சியில் இருந்து வெற்றிவேல் ஓட்டம்..? டென்ஷனில் அ.ம.மு.க.!

தினகரன் கட்சிக்கு இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கிடைத்தது போன்று உள்ளாட்சித் தேர்தலில் கொஞ்சூண்டு வெற்றி கிடைத்திருக்கிறது.


இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சிகரமான தகவல் தினகரனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆம், தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் பொருளாளர் என்ற பெரிய பதவியில் இருக்கும் வெற்றிவேல், அ.தி.மு.க.வுக்கு தூதுவிட்டுள்ள செய்தி பத்திரிகையில் அம்பலமாகியுள்ளது.

எடப்பாடியை நேரில் சந்தித்து கட்சியில் சேர்வதற்கு வேண்டுகோள் வைத்தாராம் வெற்றிவேல். ஆனால், வெற்றிவேல் என்ற பேரைக் கேட்டதுமே எடப்பாடி கோபம் ஆகிவிட்டாராம். அவர் என் முன்னிலையில் கட்சியில் சேர்வது சரிப்படாது.

முதலில் கட்சிக்குள் இருந்து தினகரனை திட்டவும், அ.தி.மு.க.வுக்கு பாராட்டவும் செய்யுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டாராம். என்ன செய்யப்போகிறார் வெற்றிவேல்..? தினகரன் என்ன செய்யப்போகிறார்?