கோவைக்கு மட்டும் முதல்வர் வேலுமணியா? கடும் எரிச்சலில் எடப்பாடி பழனிசாமி!

ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரம் தங்கமணி என்றால், இடதுகரம் வேலுமணி என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு இரண்டு பேரும் இணைந்து எடப்பாடியின் வெற்றிக்கு கை கொடுத்தார்கள்.


அதன்பிறகு நிலைமை மாறியது. ஆம், தான் தன்னுடைய வழி என்று வேலுமணி தீவிரமாக சோலோ அரசியல் செய்யத் தொடங்கினார். தண்ணீர் சேமிப்புக்காக பச்சை சட்டை போட்டுக்கொண்டு தண்ணீர் சேமிப்பு சவால் என்று ஒரு இயக்கமே நடத்தினார். அதற்காக எக்கச்சக்கமாக வேலுமணிக்கு வேண்டப்பட்ட அறக்கட்டளை செய்துமுடித்தது.

அதையடுத்து இப்போது தன்னுடைய தனிப்பட்ட வெற்றியாக கோவையில் நம்ம கோவைன்னா ஸ்மார்ட்டுங்க, என்று ஐந்துக்கு ஐம்பது மார்க் வாங்கியதாக வெற்றி சிம்பல் காட்டி வருகிறார் வேலுமணி.

அவரது போஸ்டர், விளம்பரங்கள் எதிலும் ஜெயலலிதாவோ, எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ இருப்பதில்லை என்பதுதான் அதிர்ச்சியான தகவல். அதனால் டென்ஷனான எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் வேலுமணி தனி வழியில் போவதாக ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். டென்ஷனான எடப்பாடி உள்ளாட்சிக்குப் பிறகு நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என்று உறுதி அளித்திருக்கிறாராம்.