கொஞ்சமாகத்தான் பயன்படுத்தனும்! கழிப்பறை செல்லும் பெண்களுக்கு விநோத கட்டுப்பாடு! அதிர்ச்சி காரணம்!

வேல்ஸ் நாட்டில் கழிப்பறையை பயன்படுத்த போட்டப்பட்ட விதிமுறையால் 4 வயது மாணவி உடல்நலம் பாதிப்பு


வேல்ஸ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் கழிப்பறையை பயன்படுத்துவது தொடர்பாக போடப்பட்ட கடுமையான விதிமுறையால் அப்பள்ளியில் பயிலும் 4 வயது மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வேல்ஸ் நாட்டில் அமைந்துள்ள Cardiff-க்கு சொந்தமான தனியார் பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்துவது தொடர்பாக கடுமையான விதிமுறை விதிக்கப்பட்டது.

 அது, கழிப்பறைக்கு செல்லும் போது மாணவ, மாணவிகள் அங்கு பயன்படுத்தும் பேப்பரை குறைந்தளவு மற்றும் தேவையான அளவு மட்டுமே கொண்டு போக வேண்டும் என்று மிகவும் கடுமையான விதிமுறை நடைமுறையை கொண்டு வந்தது.

இந்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக, அங்கு படிக்கும் 4 வயது உடைய மாணவி பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார். இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான மாணவி மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பஹீம் கனும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானர். மேலும், அந்த மாணவி வீட்டிலும் கழிப்பறைக்கு செல்வதை குறைத்து கொண்டாள் என்று அவள் தாய் கூறினார், மேலும், அதைப் பற்றி விசாரித்ததில் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விதிமுறை குறித்து தெரியவந்தது.  

இதனை குறித்து புகார் அளித்த பெற்றோர்கள் கூறுகையில், குழந்தைகளின் உடல்நலம் மீது அக்கறையில்லாமல் அந்த பள்ளிக்கூடம் செயல்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான என் மகள் மலச்சிக்கல் பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், தற்போது பள்ளி நிர்வாகம் கழிப்பறை விதிமுறையை தளர்த்தி கொள்வதாக அறிவித்துள்ளது.