தொடரும் கைது பீதி! வந்த தடம் தெரியாமல் ஓடிப் போன வேல்முருகன்!

ஏழு தமிழர்கள் விடுதலையை முன்வைத்து சென்னையில் ம.தி.மு.க ஒருங்கிணைத்த முற்றுகை போராட்டத்திற்கு வந்ததும் தெரியாமல் சென்றதும் தெரியாமல் வந்துவிட்டு சென்றால் வேல்முருகன்.


மீது தமிழக போலீசார் ஒரு கண்ணாக இருந்து வருகின்றனர். அதிலும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தூத்துக்குடி சென்ற வேல்முருகனை கைது செய்த போலீசார் கிட்டத்தட்ட மரண பயத்தை காட்டிய பிறகே சிறையில் அடைத்தனர். பின்னர் உளுந்தூர் பேட்டை டோல் கேட் தாக்குதல் வழக்கு என அடுத்தடுத்து வழக்குகள் வேல்முருகன் மீது பாய்ந்தது.

   இந்த வழக்குகளில் எல்லாம் ஜாமீனில் வெளியே வந்த பிறகு வேல்முருகன் மிகவும் அடக்கியே வாசித்து வருகிறார். முன்பெல்லாம் வாரத்திற்கு ஒரு முறை செய்தியாளர் சந்திப்பு, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை போராட்டம் என பிசியாக இருந்து வந்த வேல்முருகன் கடந்த மாதம் முதலே தமிழகத்தில் தான் இருந்தாரா என்கிற சந்தேகம்எழும் அளவிற்கு தலைமறைவாக இருந்தார்.

   இந்த நிலையில் தான் சென்னையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேல்முருகனுக்கு வைகோ அழைப்பு விடுத்தார். போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்பதால் போராட்டம் துவங்கிய சில மணி நேரம் கழித்து சத்தம் இல்லாமல் வந்து மேடையேறினார் வேல்முருகன், பிறகு மேடையில் சிறிது நேரம் பேசிவிட்டு அப்படியே சத்தம் இல்லாமல் சென்றுவிட்டார்.

   இதற்கு காரணம் தற்போதும் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிற அச்சம் தான் என்கிறார்கள் வேல்முருகனுக்கு நெருக்கமானவர்கள். சீமானைப் போலவோ, மே 17 திருமுருகன் காந்தியை போலவோ வேல்முருகன் குரூப்பில் பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ள யாரும் இல்லை. இதே போல் வன்னியர்களுக்காக வேல்முருகன் கட்சி நடத்துகிறார் என்கிற ஒரு பிரச்சாரமும் செய்யப்படுகிறது.

   இதனால் என்ன தான் ஈழத்தமிழர்களுக்காக வேல்முருகன் காட்டு கத்து கத்தினாலும் அவர்கள் தரப்பில் இருந்தும் பெரிய அளவில் நிதி உதவி கிடையாது.இதனால் வழக்கு செலவுகளுக்கு அஞ்சியே வேல்முருகன் வீட்டில் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது- மேலும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சரியான கூட்டணியில் சேர்ந்து எம்.பியாகும் கனவும் வேல்முருகனுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

   அதனால் தான் அண்ணன் அடக்கி வாசிப்பதாக வேல்முருகன் தொண்டர் அடி பொடிகள் கூறி வருகிறார்கள்.