ஒருத்தனுக்கு அலட்சியம்! இன்னொருத்தனுக்கு அதிவேகம்! பார்ப்போரை உறைய வைக்கும் விபத்து!

வேலூர்: சாலையை கடக்க முயன்ற நபர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

ஆம்பூரில் உள்ள சான்றோர்குப்பத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயராஜ். இவர் வழக்கம்போல, தனது கடையை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல முயன்றார். அப்போது, திடீரென வேகமான வந்த கார் மோதி ஜெயராஜ் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, காரை ஓட்டி வந்த நபர் ஆம்பூர் போலீசில் சரணடைந்தார். 

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சியை தற்போது சமூக ஊடகங்களில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், ஜெயராஜ் வேகமாக தூக்கி வீசப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாலை விபத்து ஏற்படுத்துவோர் இதனை பார்த்தாவது திருந்த வேண்டும் என, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.