திருமுருகன் காந்தியை மெல்லக் கொல்லும் விஷம்! சிறையில் பாதரசம் கலந்த உணவு! சற்று முன் வெளியான அதிர்ச்சி புகார்!

திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதற்கு சிறையில் அவருக்கு பாதரசம் கலந்த உணவு வழங்கப்பட்டதே காரணம் என புகார் எழுந்துள்ளது.


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்குமான போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் 5 மாதங்களுக்குப் பின் வெளியில் வந்தார். 

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய அவர் நாடு திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தனிமைச் சிறை, சுகாதாரமில்லாத உணவு போன்றவற்றால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடற்புண், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியுற்ற திருமுருகன் காந்திக்கு எழும்பூர் மற்றும் செங்கற்பட்டு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. வெளியில் வந்த போதும் அவரால் முன்புபோல் சரிவர செயல்படமுடியவில்லை என்றுகூறப்படுகிறது.

சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில்தான் பிரச்னை என்றும், அது பாதரசம் கலந்த உணவாக இருக்கக் கூடும் எனவும் மே 17 இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்துப் பரிசோதனை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.