விஜயின் பைரவா திரைப்பட நஷ்டமும்! ஒரு தயாரிப்பாளரின் திடீர் மரணமும்! அதிர வைக்கும் காரணம்!

விஜயா ப்ரோடக்ஷன் மிகவும் பழமை வாய்ந்த நிறுவனம் ஆகும்.


இதன் நிறுவனர் நாகி ரெட்டி ஆவார். இவர் அந்த காலத்திலேயே பல வெற்றி படங்களை தயாரித்த பெருமைக்கு உரியவர் என்றே கூறலாம். இவரது மறைவிற்கு பின்னர், இவரது இளைய மகனான வெங்கட்ராம ரெட்டி இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று கொண்டார்.

தாமிரபரணி, வேங்கை, படிக்காதவன், வீரம், பைரவா உள்ளிட்ட 5 திரைப்படங்களை தமிழில் தயாரித்தவர் வெங்கட்ராம ரெட்டி. அடுத்து இவரது தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்து வரும் ’சங்கதமிழன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (மே 12) மதியம் 1 மணியளவில் உயிர் இழந்தார். வெங்கட்ராம ரெட்டியின் மறைவுக்கு திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே 2006ம் ஆண்டு முதல் வெங்கட்ராம ரெட்டி விஜயா வாகினி நிறுவனத்தை பொறுப்பேற்று செயல்படுத்தி வந்தார். மெரிகுரி பூக்கர் எனும் திரைப்படம் தான் இவருக்கு முதல் படம். இதன் பிறகு வருடத்திற்கு ஒரு படம் என விஜயா புரடக்சன்ஸ் சிறப்பாக செயல்பட்டு வந்தது. விஷாலின் தாமிரபரணி, தனுசின் படிக்காதவன் படங்கள் நல்ல லாபம் தந்தது.

இதன் பிறகு 2014ல் அஜித்தை வைத்து வீரம் படத்தை எடுத்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக படம் எடுக்காமல் இருந்தவர் கடைசியாக விஜயின் பைரவா படத்தை தயாரித்தார். 2017ல் இந்த படம் வெளியான நிலையில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த படத்தை எடுக்க முடியாமல் மிகுந்த வேதனையில் தவித்து வந்தார்.

பிறகு கஷ்டப்பட்டு விஜய் சேதுபதியை வைத்து சங்கத் தமிழன் எனும் திரைப்படத்திற்கு பூஜை போட்டார். ஆனால் படத்தை தயாரிக்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடியில் வெங்கட்ரராம ரெட்டி தவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்தார்.