மாதவிலக்கு வலி நீக்கும் வாழைப்பூ, மேலும் வேர்க்கடலை மற்றும் நாவல்பழம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்

வாழை மரத்தின் பழம் மட்டுமின்றி இலை, தண்டு, பூ என அனைத்துமே மருத்துவப் பயன்கள் நிரம்பியதுதான். இதனை பெண்களின் தோழி என்கிறார்கள்.


  மாதவிலக்கு வலி இருக்கும் பெண்கள் வாழைப்பூவை வேகவைத்து அதன் நீரை குடித்தால் உடனடி நிவாரணம் தெரியும்.

·         வாழைப்பூவை ரசம் வைத்து குடித்தால் நாட்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் பாலியல் நோயில் இருந்து விடுதலை கிடைக்கும்.·         உடல் சூடு, ரத்த மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை வதக்கியோ சாறு குடித்தோ குணம் அடையலாம்.

·         இன்சுலின் சுரப்பை சரிசெய்யும் சக்தி வாழைப்பூவுக்கு உண்டு. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.


 மூளை புத்துணர்வுக்கு வேர்க்கடலைமகாத்மா காந்தியின் ஆரோக்கியத்தை காப்பாற்றிய உணவு வகையில் வேர்க்கடலைக்கு தனியிடம் உண்டு.

·         மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள், வலியை நீக்கும் தன்மை வேர்க்கடலைக்கு உண்டு.

·         வேர்க்கடலையில் அதிக புரதம் இருப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்கு அதிகம் கைகொடுக்கிறது.

·         தோல் பிரச்னை, அரிப்பு இருக்கும்போது வேர்க்கடலை சாப்பிடுவது நல்ல பலன் தரும். மூளையின் புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது.

நிறைய சத்துக்கள் இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் கொழுப்பு சத்து நிரம்பியவர்கள் இதனை தொடவேகூடாது.


பல் ஆரோக்கியம் காக்கும் நாவல் பழம்நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது என்றுதான் நாவல் பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பிற மருத்துவ குணங்களை பார்க்கலாம்.

·         பசியைத் தூண்டும் சக்தியும் பல், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சத்துக்களும் நாவல் பழத்தில் இருக்கின்றன.

·         ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை நாவல் பழத்தில் நிரம்பியிருக்கின்றன.

·         இதயத்தின் தசைகளை வலுவாக்கும் சக்தியும் நாவலுக்கு உண்டு.

·         நரம்பை பலப்படுத்துவதுடன் வயிற்றுப் புண்களை தீர்க்கும் குணமும் நாவலுக்கு உண்டு.