பெண்களை திருப்திபடுத்த ஆண்கள் வயாகரா பயன்படுத்தலாமா? கிளுகிளு ரிப்போர்ட்!

உடலுறவு நேரம் நீடிக்க பயன்படுத்தும் வயாகரா உடலுக்கு தீங்கு என்பதால் தர்பூசணி, அத்திப்பழம், பாதாம், பூண்டி உள்ளிட்டவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


ஆண்களின் முக்கிய பிரச்சினையாக மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு, ஆண்மை குறைபாடு போன்றவை ஒரு புறம் இருக்க, மறு புறத்தில் விறைப்பு தன்மை குறைவால் பல ஆண்கள் இல்லற வாழ்வில் நிம்மதியில்லாமல் இருக்கின்றனர் . 

விறைப்பு தன்மை பிரச்சினை இருக்கும் ஆண்கள் வயாகரா எடுத்து கொள்கின்றனர். ஒரு புறத்தில் இதற்கு தீர்வு தருவது போல் தந்து விட்டு பின்னர் விளைவுகளை தருகிறது. வயாகரா மாத்திரைகள் ரத்த அழுத்தத்தை குறைக்க கண்டுபிடிக்கப்பட்டவை. இதில் சில்டேநாபில் என்ற மூல பொருள் உள்ளது. இது உடலில் வேதி வினைகளை ஏற்படுத்தி, பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைக்கிறது. சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது.  

இது போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் ஆரம்பத்தில் இனிமையை தந்து போக போக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒரு வித உணர்வை நேரடியாக தூண்டாமல் மனதில் மாய உணர்வை ஏற்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட செய்யும்.  

வயகரா உட்கொள்வதால் நேரடியாக நரம்பு மண்டலத்தில் தாம்பத்திய உணர்வை அதிகம் தூண்ட செய்யும். இதனால், ஆண்களுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இது நரம்பு மண்டலத்தையே முற்றிலும் சிதைத்து விடும்.  

வயாகராவை தொடர்ந்து எடுத்து கொண்டு வந்தால் ரத்த ஓட்ட பாதையில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம். இது மாரடைப்பு, பக்க வாதம், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றை ஏற்படுத்தும். இதயம் பலவீனம் உள்ளவர்கள் வயாகராவை எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வயாகரா ஆண்களின் விறைப்பு தன்மையை போக்குவதில்லை. சிறிது நேர தாம்பத்திய உறவை மேம்படுத்த செய்கிறது. இதன் தாக்கம் அதிக நேரம் இருந்தால் பிறப்புறுப்பில் ஒரு வித வலியை தருமாம்.  

வயகராவை மூளை பகுதிக்கு செல்வதால் தலைவலி அதிகரிக்க கூடும். பார்வை குறைபாடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் வாந்தி, குமட்டல், அஜீரண கோளாறுகள், ஒரு வித சோர்வை உடலுக்கு தந்து உடல் நலனை முற்றிலுமாக பாதித்து விடும்.

 வயகரா மாத்திரைகளை இதய நோயாளிகள் - கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் - சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் - குறைந்த ரத்த அழுத்தமுள்ளவர்கள் - நரம்பு தளர்ச்சி கொண்டோர் எடுத்து கொள்ளக் கூடாது.

வயாகரா மாத்திரையை 24 மணி நேரத்தில் 1 மாத்திரை எடுத்து கொள்வது உகந்தது. அளவுக்கு மீறினால் பிரச்சினைகள் கட்டாயம் ஏற்பட கூடும்.

வயாகராவிற்கு மாறாக அவகேடோ, தர்பூசணி, அத்திப்பழம், பாதாம், பூண்டி, இஞ்சி, பூசணி விதைகள் நல்ல பலனை தரும். இந்த உணவுகள் இல்லற வாழ்வு இன்புற அற்புதமாக உதவும்.