நடந்துமுடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சீட் வாங்குவதற்குள் ஜி.கே.வாசன் பட்ட அவமானமும், கஷ்டமும் அவருக்கு மட்டும்தான் தெரியும். எல்லா கட்சிகளும் பெட்டி வாங்கிக்கொண்டு ஆதரவு கொடுக்க, எனக்கு காசே வேண்டாம், சீட் கொடுங்க என்று கெஞ்சிக் கதறித்தான் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தார்.
கட்சியைக் கலைக்க வாசன் ரெடி..! காங்கிரஸில் ஐக்கியமா பா.ஜ.க.வில் பதவியா?

ஆனால், கூட்டணிக் கட்சியினர் யாரும் வாசனையும், த.மா.கா. ஊழியர்களையும் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்பதால் அப்செட் ஆனார். இனியும் இந்தக் கட்சியை வைத்துக்கொண்டு காலம் கடத்தமுடியாது என்ற தெளிவான முடிவுக்கு வந்துவிட்டார். ஏதாவது ஒரு கட்சியில் இணைந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
வாசனின் முதல் சாய்ஸ் காங்கிரஸ்தான். ஆனால், இதுவரை திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆகியோர் வாசனை மிகவும் கேவலப்படுத்தி பேசி வந்தார்கள். அதனால் காங்கிரஸ் கட்சியில் நுழையவேண்டுமா என்று சிந்தித்தார். இந்த நேரத்தில்தான் பா.ஜ.க. வாசனை கொஞ்சம் வரவேற்றது.
அதாவது தமிழிசையின் பதவி இந்த மாதத்துடன் முடிவடைய இருப்பதால், அடுத்த மாநிலத் தலைவராக வாசனை போடலாமா என்று யோசித்தார்கள். அதற்காகவே டெல்லிக்குச் சென்ற வாசன் பா.ஜ.க. தலைவர் அமீத் ஷாவை சந்தித்துப் பேசினார். ஆனால், அந்த சந்திப்பு அத்தனை சுமூகமாக முடியவில்லை. அதனாலே, காங்கிரஸ் கட்சியைச் சேந்த குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சிதான், இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி வாசனுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறாராம்.
என்ன செய்யப்போகிறார் வாசன் என்பது விரைவில் தெரிந்துவிடும்.