அத்திவரதருக்கு டாட்டா! வந்தவர்களில் டாப் வரிச்சியூரும், நயனும் தான்! ஆனால் நயனின் மதம் எது தெரியுமா?

ஒருவழியாக அத்திவரதர் தரிசனம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அவருக்கு விடை கொடுத்து மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.


அத்திவரதர் வரவால் நாட்டில் நிறைய மழை பொழியும் என்று சொன்னார்கள். அது நடந்ததோ இல்லையோ, ஏராளமான நபர்கள் வீட்டில் பண மழை பொழிந்திருக்கிறது. ஆம், அர்ச்சர்கர்கள், காவலர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆகிய அத்தனை பேரும் விருந்தினர்களை உள்ளே அனுப்பி லட்சங்களை வாரிக் கொட்டியிருக்கிறார்கள்.

டோனர் பாஸ் ரூ3000, வி.ஐ.பி பாஸ் ரூ4500, வி.வி.ஐ.பி பாஸ் ரூ.6000, அத்திவரதர் அருகில் நின்று தரிசனம் செய்ய ரூ10000 என்று ரேட் குறிக்கப்பட்டது. இந்தப் பணம் எல்லாம் எங்கே போனது, எங்கே கணக்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இதில் ஏராளமான போலிகள் உலவின. இது நேரத்திற்கேற்ப இதைவிட கூடுதல் விலையில் விற்கப்பட்டன.

அர்ச்சகர் தட்டில் ரூ.500 போட்டால், அத்திவரதர் அருகில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் பச்சையப்பாஸ் சில்க் பெயரில் அச்சிட்ட ஐந்து அத்திவரதர் படத்துடன் பூஜை செய்யப்பட்ட பூக்களை அர்ச்சகர் கொடுப்பார். அதுவே 1000 ரூபாய் போட்டால் 10 அத்திவரதர் படத்துடன் பூஜை செய்யப்பட்ட பூக்கள் கிடைக்கும்.

ஆனால் பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த், நடிகை நயன்தாரா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்,

அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் அத்திவரதர் சிலை முன்பு சம்மணம் போட்டு உட்கார்ந்து, 10 நிமிடம், 15 நிமிடம் தரிசனம் செய்தார்கள். இப்படி தரிசனம் செய்ய அர்ச்சகருக்கு ரூ10,000-, ரூ20,000 கொடுக்கப்பட்டது.

ஆர்த்தி கணேஷ், வரிச்சியூர் செல்வம், ரஜினிகாந்த், விஜயகாந்த், நயந்தாரா, ராஜாத்தி அம்மாள், தேவ கவுடா, சந்திரசேகர ராவ், எடப்பாடி பழனிசாமி, துர்கா ஸ்டாலின் -என்று ஏராளமான பேர் வந்தார்களே, அவர்கள் எப்படி என்று அர்ச்சகரிடம் கேட்டோம்.

எங்களுக்கு வரிச்சியூர் செல்வம்தான் அள்ளியள்ளிக் கொடுத்தார். அதேபோல் நயன்தாரா மேடம் எங்ககூட நல்லா போட்டோ எடுத்துக்கிட்டாங்க. மத்தவங்களால ஒண்ணும் பிரயோஜனமில்லை என்றார்கள். நயன்தாரா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பது இவர்களுக்குத் தெரியுமோ, தெரியாதா?