ராதாரவி விவகாரம்! நாக்கை பிடுங்கிக் கொள்வது போல் நயன்தாராவை கேள்வி கேட்ட வரலட்சுமி!

மீடூ புகார் தொடர்ச்சியாக எழுந்த போது அமைதியாக இருந்தது ஏன் என்று நயன்தாராவை நடிகை வரலட்சுமி அதிரடியாக கேட்டுள்ளார்.


ராதாரவி நடிகை நயன்தாராவை ஆபாசமாக பேசிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராதாரவி போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று நடிகர் சங்கத்தை கேள்வி கேட்டு நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா ராதாரவி தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் கேள்விகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மீ டூ பிரச்சினை எழுந்தபோது சின்மயிக்கு ஆதரவாகவும் தனக்கு ஆதரவாகவும் திரைத் துறையில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து இருந்தால் தற்போது இந்த பிரச்சினையே வந்திருக்காது என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் இதன் தீவிரத்தை புரிந்து கொண்டிருப்பது எப்படி சரியாகும் என்றும் வரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அமைதியாக இருப்பது எதற்கும் தீர்வாகாது எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சரி செய்ய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று வரலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதாவது மீடூ விவகாரத்தின் போது நடிகை நயன்தாரா எந்த கருத்தையும் கூறாமல் அமைதியாக இருந்தார். தற்போது தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனைக் குறிப்பிட்டு தான் நயன்தாரா நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார் வரலட்சுமி.