காயத்திரி ரகுராமை கண்டுகொள்ளாமல் விஜய் அப்பா மீது பாயும் வன்னி அரசு!

இன்று விடுதலை சிறுத்தைகளுக்கு செமையாக தீனி போட்டுக்கொண்டு இருக்கிறார் பிரபல நடிகையான காயத்திரி ரகுராம். அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாத வி.சி.க., ஏனோ திடீரென விஜய்யினப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது பாய்ந்திருக்கிறார். அவர் அறிக்கை இது.


இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நல்ல ஓர் கதை ஆசிரியர். கற்பனையாக திரைக்கதையை மிக ரசிக்கும்படி அமைக்க கூடியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால், அவரே ஒரு நல்ல திரைக்கதையை எழுதி அந்த கதாபாத்திரங்களில்

நடிகர் ரஜினிகாந்தை முதல்வராகவும் நடிகர் கமல்ஹாசனை துனை முதல்வராகவும் நடிக்க வைக்கலாம். வேண்டுமானால் அவரது மகன் விஜயை போலீசு மந்திரியாக கூட நடிக்க திரைக்கதை அமைக்கலாம்.

கபாலி, பிகில், தசாவதாரம் போன்ற படங்களை விட வசூல் அள்ளிக்கொண்டு ஓடும்.  இதற்கு ஒரே ஒரு பிரச்சனை நடிகர்கள் ரஜினியும் கமலும் இணைந்து கால்ஷீட் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.

தமிழ்நாட்டின் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அப்படித்தானே மிஸ்டர் ஏசிஎஸ்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வன்னி அரசு. அதுசரி, கோயிலை அசிங்கம் என்று சொன்னால் மட்டும் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா வன்னி அரசு?