வணக்கம் சோமு ஒரு ஆம்பளையா? கடத்தப்பட்ட டீச்சர் காரில் வைத்து கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்!

ஆசிரியரை கடத்தி திருமணம் செய்ய முயற்சித்த அதிமுக பிரமுகர், போலீசாரால் வலைவீசி தேடப்பட்டு வருகிறார்.


திருச்சியை சேர்ந்தவர் சோமு. இவர் திருச்சி மலைக்கோட்டை அதிமுக பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்

இதனிடையே கல்லூரி பேராசிரியை மீது காதல் கொண்டுள்ளார் சோமு. இதை அவரிடம் தெரிவித்தபோது தொடர்ந்து மறுத்துள்ளார். இதனால், பேராசிரியரை கடத்தி திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு வெளிநாட்டில் உள்ள நண்பர்களிடம் உதவி கோரியுள்ளார்.

சோமுவுக்கு உதவிபுரிய அலெக்ஸ் மற்றும் மரிய பிரகாஷ் இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் மூவருடன் மேலும் சிலரும் சேர்ந்து கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் பேராசிரியரை கடத்தியுள்ளனர்.

ஆம்புலன்சில் வைத்து சோமு தாலிகட்ட முயற்சித்துள்ளார். சோமு ஒரு ஆம்பளையா? என்று  பேராசிரியர் கேள்வி கேட்டுள்ளார் . பின்னர், இவர்களின் ஆம்புலன்ஸை போலீஸ் துரத்தியதால் பேராசிரியரை பாதியில் இறக்கிவிட்டுள்ளனர்.

அலெக்ஸ் மற்றும் பிரகாஷ் இருவரும் வெளிநாடு திரும்புகையில், மடக்கி பிடித்து அவர்களை போலீசார் கைது செய்தனர். சோமு உள்ளிட்ட 4 பேரை போலீஸ் தரப்பு தேடி வருகிறது.