என்னுடன் ராபர்ட் ரிலேசன்ஷிப்பில் இருந்தான்! என் பெயரை பச்சை குத்தியிருக்கிறான்! வனிதா பளீர் பேட்டி!

சென்னை: நடனக் கலைஞர் ராபர்ட் உடன் எனக்கு உறவு இருந்தது உண்மைதான் என,வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


விஜயகுமாரின் மகளான வனிதா சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். ஓரிரு சினிமா படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பிக் பாஸ் தமிழ் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்பாக, சமீபத்தில் தனியார் செய்தி இணையதளம் ஒன்று, ராபர்ட் உடன் பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டது. அதாவது, வனிதாவின் தயாரிப்பில் ராபர்ட் இயக்கிய எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தின்போது இருவரும் நெருங்கிப் பழக தொடங்கியதாக, ராபர்ட் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், இந்த தகவலை வனிதா தற்போது மறுத்துள்ளார். ''ராபர்ட் எனது 3வது கணவர் எனக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை. எங்களுக்குள் ஒருவிதமான உறவு சில காலம் இருந்தது உண்மைதான். ஆனால், பின்னர் எங்களின் வழி வேறு என்பதால், பிரிந்துவிட்டோம்.

எனது பெயரை ராபர்ட் கையில் பச்சை குத்தியுள்ளதாகக் கூறுகிறார்கள். அதுஅவரது தனிப்பட்ட விருப்பம். தன்னை பிரபலப்படுத்துவதற்காக அவர் அப்படி செய்திருக்கலாம்,'' என வனிதா பொங்கி தள்ளிவிட்டார்.

வனிதாவைச் சுற்றி நாள்தோறும் புதுப்புது சர்ச்சைகள் தொடர்வதை பார்த்தால், பிளே பாய் போல அவர் ஒரு பிளே கேர்ளாக இருப்பார் போல என்று சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.