ஆமாம் எனக்கு கமல் மீது ஆசை இருக்கிறது! இதில் ஏன் வெட்கப்பட வேண்டும்? வனிதா ஷாக்கிங் பேட்டி!

பிக் பாஸ் சீசன் 3 ல் கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் வனிதா. இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.


பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நடிகை வனிதா சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில், பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு ஜோடியை தேடி அவர்களுடன் ரொமான்ஸ் செய்து வருகின்றனர். இவ்வாறு ரொமான்ஸ் செய்து அவர்கள் எலிமினேட் ஆகாமல்  பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருக்க அதை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவர்கள் செய்து வரும் ரொமான்ஸ் எல்லாம் பொய்யே எனவும் நடிகை வனிதா கூறியுள்ளார்.

ஆனால் நான் யாரை ரொமான்ஸ் செய்கிறேன் என்றால் அது கமல் சார் தான். அதனால் தான் அவர் வாரத்தில் வரும் அந்த இரண்டு நாட்களுக்காக நான் ஆவலாக காத்துக்கொண்டிருப்பேன் . எனது அப்பா மற்றும் தம்பியை போல அவரும் மிகவும் அழகான தோற்றத்தை கொண்டவர் என்றும் நடிகை வனிதா கூறியுள்ளார்.